சிறையில் இருக்கும் கணவனுக்கு சவர்க்கார கட்டிற்குள் கஞ்சா எடுத்துச் சென்ற மனைவி கைது.

வர்க்காரத்திற்குள் கஞ்சாவினை மறைத்து வைத்து கைதியாக தடுத்து வைக்கப்பட்டு்ள்ள கணவனுக்கு கொடுத்த கொடுத்த மனைவி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நேற்று (02.09.17) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ள கைதியான தனது கணவரை கிளிநொச்சிப் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்றையதினம் பார்வையிட வந்த போது சவர்க்கார கட்டிற்குள் கஞ்சாவினை மறைத்து வைத்து சிறைச்சாலைக்குள் சென்றுள்ளார்.

சிறைச்சாலை உத்தியோகத்தார்களினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது, சவர்க்காரத்திற்குள் கஞ்சா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை உத்தியோகத்ர்கள் குறித்த பெண்ணை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள்.(மடவவள)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -