இனவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிவதாக சவால் விட்ட பொலிஸ் மா அதிபர் எங்கே ?

முழு உலகத்திலேயே இலங்கை மாத்திரம் தான் மியன்மாருக்கு ஆதரவாக ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ள அதேவேளை sltj இன் ஆர்ப்பாட்டத்தைதடுக்க முனைந்த அரசு இனவாதிகளின் பேரணியை தடுக்க முயற்சிக்காமை ஏன் என பானதுறை பிரதேச சபைமுன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் :

உலக நாடுகள் அனைத்தும் கண்டிக்கும் வகையில் மியர்மார் அரசின் செயற்பாடு அமையப் பெற்றுள்ளது.பெருமதிப்பிற்குரிய பௌத்த மதத் தலைவர்களில் ஒருவரான தலாய் லாமா கூட இந்த விடயத்தை பகிரங்கமாககண்டித்துள்ளார்கள். இவ்வாறான நிலையில் இலங்கையில் இவ்வாறான ஆதரவுப் பேரணிகள் நடாத்தப்படுவதானதுஇலங்கை மக்களின் மனநிலையை சர்வதேச ரீதியில் கேள்விக்குட்படுத்துகிறது.

மியன்மார் அரசுக்கெதிராக sltj கண்டனப் பேரணியை நடாத்த முயற்சித்த போது, நீதிமன்றம் அவர்களின் திட்டத்தைகுளப்பும் வகையிலான சில தடை உத்தரவுகளை வழங்கியிருந்தது. மியன்மார் அரசுக்கு ஆதரவாக இனவாதிகள்பேரணி நடாத்திய போதி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு அவர்களுக்கு இவ்வரசானது ஆதரவுநல்கியிருந்தது.இவ்வரசானது இனவாதிகளை அரவணைக்கும் பண்புடையது என்பதற்கு இன்னுமென்ன சான்றுவேண்டும்.

மியன்மார் அரசு முன்னெடுத்துக் கொண்டிருப்பது பயங்கரவாத செயற்பாடு. பயங்கரவாத செயற்பாடுகளைஆதரிப்பவார்கள் பயங்கர வாதிகள் தான். அது மாத்திரமன்றி, மியன்மார் அரசின் செயற்பாடு பிழையானதல்ல எனஅனைவரும் ஏற்றுக்கொண்டிருப்பதால் இனவாதிகளின் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மியன்மார் விடயத்தில் இவ்வரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். வட கொரியா விடயத்தில் கண்டனஅறிக்கை விடும் இவ்வரசானது மியன்மார் விடயத்தில் மௌனம் பேணுவதேன். தற்போது இடம் பெறும் பேரணிவிடயங்களை எடுத்து நோக்கினாலேயே, இவ்வரசின் ஆட்சிக் காலத்தில் மியன்மாரைப் போன்று இலங்கையில்ஏற்பட்டால் அதனை இவ்வரசு ஆதரிக்கும் என்பதில் ஐயமில்லை.

நல்லாட்சி தொடர்பில் முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -