பாரதி கலா மன்றத்தின் இலக்கிய நிகழ்வும் கவியரங்கமும்

கொழும்பு பாரதி கலா மன்றம் எதிர்வரும் ஞாயிறு 24-09-2017 மாலை 4 மணிக்கு வத்தளை,பழைய நீர்கொழும்பு வீதி இல . 118/8ல் அமைந்துள்ள வட கொழும்பு தமிழ் பொது நலமன்றத்தில் இலக்கிய நிகழ்வினையும்

கவியரங்கத்தினையும் நடாத்துகின்றது.

பாரதி கலா மன்றத் தலைவர் த.மணி தலைமை தாங்கும் நிகழ்வில்

முன்னாள் இந்து கலாசார அமைச்சரும் கோப்பியோ நிறுவன ஸ்தாபகத்

தலைவருமான பி.பி.தேவராஜ் " காலத்தை வென்ற மகாகவி பாரதி" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுவார்.

முத்தமிழ் மன்றத் தலைவர் கலாபூஷணம் ஆர். வைத்தமாநிதி, விவேகானந்தா கல்லூரி அதிபர் இராஜமணிபிள்ளை இராமையா, வட கொழும்பு தமிழ் பொது நலமன்றத் தலைவர் சி.ராஜலிங்கம் ஆகியோர்

உரையாற்றுவார்.

கவிஞர் நஜ்முல் ஹுசைன் தலைமையில் ' பாரதியும் நாமும் ' என்றதலைப்பில் நடைபெறும் கவியரங்கில் கவிஞர்கள் எஸ். தனபாலன், ஆர். தனராஜ், சுபாஷினி பிரணவன், சித்தன் ரங்கநாதன், கம்மல்துறை இக்பால், வெளிமடை ஜஹாங்கீர் ஆகியோர் கவிதை பாடுவர். பட்டயக்

கணக்காளர் எஸ். தியாகராஜா கௌரவிக்கப்படுவார்.

செல்வி சலோமி அபிகாயல், மைக்கேல் செல்லையா நிகழ்ச்சியினை

தொகுத்து வழங்க செல்வி ஜெயந்தி நன்றியுரை வழங்குவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -