எம்.எஸ்.எம்.ஸாகிர்-
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கிடையில் உற்பத்தித்திறன் போட்டி சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்டது.
சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஐ.எம். றிகாஸ் தலைமையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், சாய்ந்தமருது யுனிவேஷல் பாலர் பாடசாலை முதலாம் இடத்தைத் தட்டிக் கொண்டது.
இந்நிகழ்வில், பாடசாலையின் தவிசாளர் ஏ.ஆர்.எம். ஜுபீர், ஆசிரியைகளான எம்.ஜே.இஸட். நளீமியா, ஐ.எம்.எப். ஷுமி பானு மற்றும் மாணவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டதைப் படங்களில் காணலாம்.


