க.கிஷாந்தன்-
சைட்டம் தனியார் வைத்திய கல்லூரிக்கு எதிராக மலையகத்தில் பல வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
அந்தவகையில் டிக்கோயா வைத்தியசாலையில் வைத்தியர்கள் 02.08.2017 அன்று காலை சேவை நேரத்தில் கைகளில் கறுப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பை தெரிவித்து வழமைபோல் வைத்திய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டனர்.
இலவச சுகாதார சேவை மற்றும் இலவசக் கல்வியை பாதுகாக்கக் கோரியும் சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரியை அரசுடமையாக்கக் கோரியும் 02.08.2017 அன்று நாடாளவீய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடதக்கது.