கொரியா செல்லும் சாதனை மாணவன் வாழைச்சேனை யூனிஸ்கானுக்கு கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் நேரில் சென்று வாழ்த்து.




எச்.எம்.எம்.பர்ஸான்-

வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவன் மீரா முகைதீன் யூனுஸ்கான் இலங்கைப் புத்தாக்குநர் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட இளங்கண்டு பிடிப்பாளர் போட்டியில் தானியங்கி மூலம் தயாரிக்கப்பட்ட நெல் விதைத்தலும், உரம் மற்றும் எண்ணெய் விசுறுதல் போன்ற செயற்பாடுகளை இயக்கக்கூடிய இயந்திரமொன்றை கண்டுபிடித்தமையால் தேசிய மட்டத்தில் தெரிவாகி கொரியாவில் நடைபெறுகின்ற சர்வேதேச இளங்கண்டு பிடிப்பாளர் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு பங்கு பற்றுவதற்கு நாளை (08.08.2017) கொரியாவுக்கு செல்லவுள்ளார்.

சாதனை படைத்த மாணவன் யூனுஸ்கானுக்கு மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் அவர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து நினைவுப் பரிசினையும் வழங்கி வைத்தார்.

 அந்நூர் தேசிய பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் சந்திப்பில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் அவர்களோடு மட்டக்களப்பு மத்தி உதவிக் கல்விப்பணிப்பாளர் எஸ்.ஏ.சீ. கலீலுர் றகுமான், ஓட்டமாவடி கோட்டக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.ஏ.ஜுனைத், அந்நூர் தேசிய பாடசாலையின் பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர், பிரதி அதிபர் எஸ்.எச்.எச்.பிரௌஸ், வாழைச்சேனை வை.அகமட் வித்தியாலய அதிபர் என்.எம்.கஸ்ஸாலி மற்றும் ஆசிரியர்களான எம்.ஐ.எம்.சுபைர், அப்துல்லாஹ், ரிஸ்வி ஆகியோர்கள் கலந்து கொண்டனர். சாதனை படைத்த மாணவனுக்கு பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹீர் அவர்களினால் பணப்பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -