எம்.ரீ. ஹைதர் அலி-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கடந்த 2017.08.24ஆந்திகதி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் சுமத்தப்பட்ட இலஞ்சக் குற்றச் சாட்டினை விசாரிக்கக் கோரல் எனும் தலைப்பிட்டு கடிதம் ஒன்றினை அனுப்பி இருந்தார்.
அதற்கமைவாக கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இதற்கான ஒப்புதலை இரண்டு வாரத்திற்குள் எழுத்து மூலம் வழங்குமாறு அறிவித்துள்ளது.