பிரச்சினை ஒன்று, மனோ கணேசன் வெளியேறினார், ஹக்கீம் உட்கார்ந்திருந்தார்

ஹபீல் எம் சுஹைர் - HMS

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் தொடர்பான வாக்குறுதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயினால் வழங்கப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே. நேற்று ஜனாதியின் இல்லத்தில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களுடனான சந்திப்பின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பிறகே புதிய சபைகள் உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

மனோ கணேசன் தனது மக்களுக்கு வழங்கிய வழங்கிய வாக்குறுதி இழுத்தடிக்கப்படுவதை உணர்ந்து இடை நடுவில் வெளியேறிச் சென்றுள்ளார். அவர் மானமுள்ளவர். தமிழராக இருந்தாலும் தன் வாக்குறுதியை யாரையும் எதிர்க்க தயங்கவில்லை.

அமைச்சர் ஹக்கீம் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் எத்தனையோ வாக்குறுதிகளை வழங்கிவிட்டார். தேர்தல் முடிந்த கையோடு பெற்றுத் தருவேன் என்றார். அமைச்சர் ஹக்கீம் தன் வாக்குறுதியை காப்பாற்றுவதில் உறுதியானவராக இருந்திருந்தால் மனோவோடு சேர்ந்து வெளியேறி இருக்க வேண்டும். இது பற்றி அஅமைச்சர் ஹக்கீம் சிறிதேனும் வாய் திறக்காமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் ஹக்கீமுக்கு சிறிதும் அக்கரையில்லை என்பதை அறிய இதனை விட என்ன சான்று வேண்டும். எப்போது சாய்ந்தமருது மக்கள் அமைச்சர் ஹக்கீமை பலமாகவும் பகிரங்கமாகவும் எதிர்க்கின்றார்களோ அப்போது தான் அவர்கள் தாகத்தை தனித்து கொள்ள கூடியதாக இருக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -