துரிதமாக இடருதவிக் கடன் வழங்க அக்கரைப்பற்று வலயத்திற்கு நிதி கிடைக்குமா?

முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்-

டருதவிக் கடன், அரச ஊழியர்கள் அனைவருக்குமான ஒரு பெரிய வரப்பிரசாதமாகும். ஆடிப்படைச் சம்பளத்தை பத்து மாதங்களால் பெருக்கி வழங்கப்படும் அ ஒ10 ஸ்ரீ 10அ பெரும்பாலான அரச திணைக்களங்களில் ;இடருதவிக்கடன் பெறுவது இலகுவாக உள்ளது. தேசிய பாடசாலை ஆசிரியர்களும் இலகுவில் இக்கடனைப் பெற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், மாகாணப்பாடசாலை ஆசிரியர்கள் இக்கடனைப் பெறுவதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். அவர்கள் தனது மாதாந்த சம்பளத்தின் 10 மடங்கு கிடைத்கும் என்ற பெரும் அவாவுடன் எதிர்பார்த்திருக்கின்றனர். மாறாகக் கிடைப்ப்து 80,000.00 , 100,000.00 , 120,000.00 இது என்ன வகையில் நியாயம். எப்படி தேவையை பூர்த்தி செய்வது.இடரைப்போக்குவது.

இக்கடனை விண்ணப்பிப்பவர்கள் பின்வரும் காரணங்களில் ஏதாவது ஒன்றிற்கு விண்ணப்பித்திருப்பர்.

1. மருத்துவச் செலவு.

2. வீடு கட்டல் ஃ திருத்தல்.

3. திருமணம்.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர். வலயக் ககணக்காளர் போன்றோர் 10 மாத இடருதவிக் கடன் வழங்கத்தயாராக உள்ளனர். ஆனால், போதிய நிதி இல்லாத நிலைமை காணப்படுகின்றது. கிழக்கு மாகாணசபை இதற்கு உரிய நிதியை வழங்க நடவடிக்கை எடுக்காமையே இதற்குத் தடையாக உள்ளது.

இது நன்கொடையோ, இலவசக்கடனோ அல்ல. மீளப்பெறப்படும் கடன் வழங்கும் திட்டமாகும். இதனை மாகாணக்கல்வி அமைச்சு வழங்கவில்லை என்றால் இது தீர்க்கப்படவேண்டிய விடயமாகும்.

பல கடன் கோரல் கோவைகள் கடனுக்காக வலயத்தில் பல மாதங்களாகத் தேங்கிக்கிடப்பதை அறிய முடிகின்றது. ஆகவே, இவ்விடயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர், முதலமைச்சர், கல்வியமைச்சர், கிழக்குமாகாண சுகாதார அமைச்சர், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

'ஆசிரியர்களின் பதவியுயர்வு, சம்பள நிலுவை வழங்கள் போன்ற விடயங்களில் அக்கரைப்பற்று வலயம் ஏனைய வலயங்களைவிடச் சிறப்பாக இயங்கி ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள் போன்றவற்றின் பாராட்டையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.'
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -