மனித உரிமைகள் புதிர் போட்டியில் ஏறாவூர் அறபா வித்தியாலயம் மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவுஏ.எச்.ஏ. ஹுஸைன்- 

லங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இருபதாவது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மனித உரிமைகள் புதிர் இறுதிப் போட்டியில் ஏறாவூர் அறபா வி;த்தியாலயம் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஐந்து கல்வி வலயங்களிலிருந்து இரண்டு சுற்றுக்களாக நடைபெற்ற போட்டிகளிலிருந்து மாவட்ட மட்டப் போட்டிக்காக மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து ஆரையம்பதி மகா வித்;தியாலயமும், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து ஏறாவூர் அறபா வி;த்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இறுதிப் போட்டி மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இவ் இரண்டு அணிகளுக்கிடையிலான போட்டியின் போது ஏறாவூர் அறபா வி;த்தியாலயம் முதலாம் இடத்தைப் பெற்றதுடன், ஆரையம்பதி மகா வி;த்தியாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதனடிப்படையில் மாகாண மட்டப்போட்டிக்காக ஏறாவூர் அறபா வி;த்தியாலயம் தெரிவு செய்யப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -