இலங்கையில் தொலைபேசி விற்பனையில் சீன நாட்டுக் கைதிகள்..!

ஹிந்தவின் ஆட்சியில் ஹம்பாந்தோட்டை பகுதியில் துறைமுகம் மற்றும் வீதிகள் என பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மஹிந்த சீன அரசின் ஊடாக மேற்கொண்டு வந்ததை நாம் அறிவோம். அந்தப் பணிகளில் சீன நாட்டுத் தொழிலார்களே அதிகம் ஈடுபடுத்தப்பட்டனர். இலங்கைத் தொழிலாளர்கள் சொற்ப எண்ணிக்கையிலானோரே வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

சீன அரசோ செலவைக் குறைப்பதற்காக ஒரு தந்திரோபாய நடவடிக்கையை மேற்கொண்டது. அந்த அடிப்படையில் சீன நாட்டுக் கைதிகளையே சம்பளமின்றி அந்த அரசு இந்தப் பணியில் ஈடுபடுத்தியது. ஆனால் பல கைதிகள் தப்பிச் சென்றுவிட்டனர். இப்போது அந்தக் கைதிகள் சிங்களக் கிராமங்களில் கையடக்கத் தொலைபேசி வியாபாரத்தில் ஈடுபட்டுத் திரிகிறார்களாம். கிராமப்புற மக்களுக்கு அவர்கள் கைதிகள் என்று தெரியாததால் அவர்களை வர்த்தகர்கள் என்று எண்ணிக்கொண்டு அந்த மக்கள் அவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருகின்றார்களாம்.

அவர்கள் கைதிகள் என்பதை கண்டறிந்த சிலர் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய இரத்தின தேரரைத் தொடர்புகொண்டு விடயத்தை எத்தி வைத்துளார்களாம். அவர்களை பிடிக்கும் பணியில் நாடாளுமன்ற உறுப்பினர் இறங்கியுள்ளார் என்று தெரிய வருகின்றது.
எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -