ஆடையும் பீடையும்.......

Mohamed Nizous-

மூடாதே என்று சொன்னார்
மூடர்கள் கூட்டம் சேர்ந்து
கூடாத வார்த்தைகளினால்
கொச்சையாய்க் கேலி செய்தார்

காட்டி உடு என்றார்
காட்டமாய் கூறி நின்றார்
கேட்டால் நாகரிகமென
கூட்டாய் பதில் சொன்னார்

பறந்து வந்த நுளம்புக்கூட்டம்
திறந்த காலில் கடித்துப் போட
இப்போது சொல்லுகின்றார்
அப்படியே மூடட்டாம்.

டெங்கிலும் பல ம டங்கு
டேஞ்சரான சில பேர்கள்
அ டங்காமல் ரசிப்பதெல்லாம்
ஆபத்தென்னு தெரியலையா?

குத்திக் காட்டினியே
குத்தம் சுமத்தினியே
குத்துற நுளம்பு கண்டா
புத்தி புறந்திருக்கு

மறைத்து அணி என்று
மறை சொன்ன கட்டளையை
குறை கூறித் திரிந்தவரே
குரைப்பீரோ இன்னமும்.

சத்தியம் சாகாது
சரித்திரம் சொல்லும் உண்மை
குத்திக் காட்ட சொல்லவில்லை
கொண்ட கவலையில் எழுதியது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -