கூளாமுறிப்பு ஆர்ப்பாட்டமும் கூட்டிவரப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களும்

ஏ.எம்.றிசாத்-

சில தினங்களுக்கு முன்பு முல்லைத்தீவு கூளாமுறிப்பில் முஸ்லிம் குடியேற்றம் இடம்பெறுகிறது காடழிப்பு நடைபெறுகிறது என கூறி ஒரு சிலரினால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எழுப்பட்ட கோசங்கள் தனி நபரை இலக்குவைத்து நடைபெற்றது என்பதை பலர் உணர்திருப்பார்கள்.

முஸ்லிம் சமூகத்தின் தலைமையாக வடக்கு முஸ்லிம்களின் குரலாக இருக்கும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது ஏன் இனவாதிகளுக்கும் இனவாத அரசியல் தலைமைகளுக்கும் இத்தனை காழ்புணர்ச்சி.அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது இந்த காழ்புணர்ச்சி வர காரணமாக அமைந்தது வடகிழக்கு இணைப்புக்கு அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார் அதேபோல் வடகிழக்கில் அபிவிருத்தி அரசியளில் முன்னோடியாக பல வேலைத்திட்டங்களை செய்திருக்குறார் இன்றும் செய்துவருகிறார் இது அதிக மக்களின் ஆதரவை பெற்றுவருவதனால் இனவத அரசியல் தலைமைகளின் இருப்பை கேள்விகுறியாக்கியுள்ளாது.

இதன் பின்னனியில் தான் இனவாத சிந்தனை மூலம் வடகிழக்கில் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு அதிகரித்துவரும் அரசியல் ஆதரவை இல்லாமல்செய்ய வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக முஸ்லிம் அரசியல் தலைமைகள் அதேபோல் தமிழ் இன விரோத அரசியல் தலைமைகளாக இருக்கும் சாள்ஸ்,விக்னேஸ்வரன்,ரவிகரன் மற்றும் விஜிந்தன் இணைந்து தமிழ் இளைஞ்சர் யுவதிகளை தூண்டிவிட்டு அமைச்சருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை அரங்கேற்றினர்.

இவ்வாறு திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டத்தை நடத்த வடபகுதிகளின் பல பகுதிகளில் இருந்து பல லட்சம் பணம் செலவு செய்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைத்துவரப்பட்டு முல்லைத்தீவு மக்கள் முஸ்லிம்களின் குடியேற்றத்திற்கு எதிராக காடழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்ற மாயயை பரப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்ட நாடகத்திற்கு தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்கள் முன்னுரிமை வழங்கியிருந்தமையும் சிங்கள இனவாத இணையங்கள் வில்பத்துக்கு அடுத்தாக முல்லைத்தீவில் முஸ்லிம் குடியேற்றம் செய்கிறார் என்று செய்திகள் வெளியிட்டு அமைச்சர் றிஷாட் பதியுதீனை இனவாதியாக காட்ட முட்பட்டதும் அவர்மீது கொண்ட காழ்புணர்ச்சியின் வெளிப்பாடாகும்.

ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் எதற்கு ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்று அறியாமல் அவர்கள் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக தங்களுக்கு செல்லித்தரப்பட்ட இனவாத கருத்தினை கோசமாக எழுப்பிவிட்டு இறுதியாக ஊடக சந்திப்பில் யார் இதனை ஏற்பாடு செய்தவர்களயே பேச விட்டு ஒதுங்கி இருந்ததையும் காணமுடிந்தது.ஆகவே இந்த ஆர்ப்பாட்டம் பல லட்சம் செலவில் அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் தான் என்பது எல்லோரும் புரிந்திருப்பார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -