காரைதீவு நிருபர் சகா-
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூரின் மறைவையொட்டி இன்று புதன்கிழமை கல்முனைப்பிரதேசமெங்கும் துக்கதினம் அனுஸ்ட்டிக்கப்பட்டது. பெரும்பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே வெள்ளைக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தன. கல்முனைக்குடியிலுள்ள அன்னாரது வீட்டில் ஜனாசா மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. பெருந்திரளான தமிழ் முஸ்லிம் மக்கள் சென்று அஞ்சலி செலுத்தினர். மன்சூரின் மகள் றகுமத் மன்சூர் முன்னாள் எம்பிக்களான எம்.ஜ.எம்.றொசாட் எஸ்.பி.மஜீட் உள்ளிட்ட பலமுக்கிய பிரமுகர்கள் காலைப்பொழுதில் அஞ்சலிசெலுத்தினர்.
முன்னாள் சம்மாந்துறை தவிசாளர் எ.எம்.நௌசாட் கூறுகையில்;
தமிழ் முஸ்லிம் என்று பேதம் பார்க்காது அரசியல் பயணத்திலீடுபட்ட ஒரு வம்சத்தின் இறுதி பெருமகன் இன்று எம்மிடமில்லை. அவரது அரசியலில் பேதமிருந்ததில்லை. அதற்கு இங்கு குமியும் தமிழ்மக்கள் சாட்சியம். இவரது இழப்பு இம்மண்ணிற்க பேரிழப்பாகும் என்றார்.
இன்றுமாலை ஜனாசா நல்லடக்கம் செய்யப்பட ஏற்பாடாகியிருந்ததமை குறிப்பிடத்தக்கது.