மட்டு. மஞ்சத்தொடுவாயில் மீன்பிடி படகுகளை திருத்தும் நிலையம் விரைவில் நிர்மாணிக்கப்படும்





ஆர். ஹஸன்-

ட்டக்களப்பு, மஞ்சத்தொடுவாய் வாவியில் மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்றை அமைப்பதற்கு கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதற்கான மதிப்பீட்டு அறிக்கையை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இது தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தனக்கு அவசரமாக அனுப்பி வைக்கமாறு மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நன்னீர் வள திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளருக்கு மீன்;பிடி மற்றும் நன்னீர் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

மீன்பிடி மற்றும் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மட்டக்களப்பு பகுதியிலுள்ள மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்று இல்லாமையினால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பாக ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மீனவர்களது படகுகள் திருத்துவதற்கோ அல்லது வேறு ஏதேனும் தேவைகள் ஏற்படும் பட்சத்திலோ வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம் அல்லது ஒலுவில் துறைமுகத்துக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விரயம், காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை மீனவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். 
 
இந்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு, பூநொச்சிமுனை மீன்பிடி சங்கம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு கொண்டு வந்ததை அடுத்து, அவர் இது குறித்து கடற்றொழில் மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார்.
இந்நிலையில், அண்மையில் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த அமைச்சர் அமரவீர உள்ளிட்ட அவரது அமைச்சின் உயர் அதிகாரிகளை மஞ்சத்தொடுவாய் பகுதிக்கு அழைத்துச் சென்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், அப்பகுதி மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை எடுத்துரைத்தார். 

பின்னர், மஞ்சத்தொடுவாய் பகுதியில் மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்றை அமைத்துத் தருவதாக வாக்குறுதி வழங்கிய அமைச்சர் அமரவீர, அதனை நிர்மாணிப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டார்.
இவ்வாறான நிலையில், மீன்பிடி படகுகளை திருத்துவதற்கான நிலையமொன்றினை அமைப்பதற்கு தேவையான மதிப்பீட்டு அறிக்கையை தயாரித்து தனக்கு அவசரமான அனுப்புமாறு மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி மற்றும் நன்னீர் வள திணைக்கள உதவிப்பணிப்பாளருக்கு மீன்பிடி மற்றும் நன்னீர் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பணிப்புரை வழங்கியுள்ளார். எனவே, நிர்மாணப்பணிகள் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -