அஸாத் சாலி தொடர்பில் முஸ்லிம்கள் அவதானமாக இருக்கவேண்டும் - இபாஸ் நபுஹான்

ஞானசார தேரரை ஜனாதிபதி பாதுகாப்பதாக அஸாத் சாலி கூறி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அதேஜனாதிபதியுடன் ஆஸாத் சாலி வங்கதேச தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமை மூலம் தான் ஒரு அரசியல் தரகர் என்பதை அஸாத் மீண்டும் ஒரு முறை சமூகத்திற்கு நிரூபித்து காட்டியுள்ளதாக பானந்துறை பிரதேச சபை முள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஞானசார தேரரும் அஸாத் சாலியும் கூட்டாளிகள் என்றும் ஞானசார தேரரை அரசாங்கமே பாதுகாக்கிறது என்றவிடயத்தையும் நாம் கூறும்போது எம்மை ஏளனம் செய்த அஸாத் சாலி போன்றவர்கள் பின்னர் ஜனாதிபதியே ஞானசாரதேரரை பாதுகாப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார்கள். முஸ்லிம் சமூக விடயங்களை வைத்து அஸாத் சாலியின் தொண்டர்களும் அவர் ஏதோ சமூகத்திற்காக குரல்கொடுக்கும் மாவீரன் என்ற அளவுக்கு ஊடகங்களில் அவரை விளம்பரம் செய்தார்கள்.

ஆனால் இன்று வங்கதேசம் சென்றுள்ள ஜனாதிபதியுடன் அஸாத் சாலியும் சென்றுள்ளதை எம்மால் அவதானிக்கமுடிந்தது. ஞானசார தேரரை ஜனாதிபதியே பாதுகாப்பதாக ஊடகங்களில் கூறி முஸ்லிம்களை உசுப்பேற்றி அரசியல் இலாபம்தேடிய அஸாத் சாலி ஞானசார தேரரை பாதுகாப்பதாக அவர் கூறிய ஜனாதிபதியுடன் இன்று தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமையானது அஸாத் சாலியின் இரட்டை முகத்தை மீண்டும் ஒருமுறை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக்காட்டியுள்ளது.

வில்பத்து வர்த்தமானியை ரத்து செய்வதாக வாக்கு வழங்கி மரிச்சுக்கட்டி மக்கள் போராட்டத்க்தைமுடித்துவைத்தமைக்காக ஜனாதிபதி அஸாத் சாலிக்கு வழங்கிய சுற்றுலாவாகவே நாம் இதை பார்க்கிறோம். ஜனாதிபதியின் இப்தாரை தாங்கள் புறக்கணிப்பு செய்தாக விளம்பரப்படுத்திய அஸாத் சாலியும் அவரது சகாக்களும் இப்போது வங்கதேசத்துக்கு ஜனாதிபதியுடன் அவர் தேனிலவு சுற்றுலா சென்றுள்ளமையை என்ன கூறி நியாயப்படுத்தப்போகிறார்கள் என இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஊடகங்களில் வந்து இனவாதிகளை உசுப்பேற்றி அரசியல் லாபம் தேடும் அஸாத் சாலி போன்ற போலிகள் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என இபாஸ் நபுஹான் கோரிக்கை ஒன்றைமுன்வைத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -