வசீம் தாஜுதீனின் கொலை வழக்கு: சந்தேகத்துக்கிடமான தகவல்கள் பகுப்பாய்வு

கர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்பட முன்னர் அவரைப் பின்தொடர்ந்த நபர்கள் தொடர்பாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவந்த புகைப்படங்கள் என்பன குறித்து பொது மக்களிடம் பெறப்பட்ட தகவல்கள் என்பவற்றிற்கும் ஏற்ப மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கிடைக்கப்பெற்ற சந்தேகத்துக்கிடமான தகவல்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிபதியிடம் இன்று (27) தெரிவித்துள்ளது.

கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் ஜெயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின் போது இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு ஹெவ்லோக் டவுன் முதல் தாஜுதீனின் மோட்டார் வாகனத்தை பின்தொடர்ந்த நபர்கள் தொடர்பிலான சாதாரண புகைப்படங்கள் பல தொடர்பில் இவ்வாறு அறிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகள் தொடர்பிலான இறுதி முடிவுகள் இதுவரை வெளியாகவில்லையெனவும் இரகசியப் பொலிஸார் நீதிமன்றத்தில் இன்று அறிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றப் புலானய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -