மு.இராமச்சந்திரன்-
தூரியன் பழத்தை பாதுகாக்க போடப்படிருந்த மின்சார வேலியில் சிக்குண்ட ஒருவர் பலியானதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய ஹிட்டிகே கம புலத்தவத்த பிரதேசத்தை சேர்ந்த 62 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான வை.குலரத்ன என்பவரே 27.07.2017 காலை 6 .30 மணியளவில் மின்சாரம் தாக்கி இவ்வாறு பலியானார்.
சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில்;
தனது தூரியன் மர தோட்டத்தில் தூரியனை கள்வர்களிடமிருந்து பாதுகாக்க தோட்டத்தை சுற்றி மின்சாரம் கம்பி வேலியமைத்திருந்த தோட்ட உரிமையாளரின் அயல் வீட்டை சேர்ந்த மேற்படி நபர் வீட்டில் குடிநீர் வராத நிலையில் அத்தோட்ட பகுதிக்குள் சென்று நீர் குழாயை திருத்த முற்பட்டபோது மின்சார கம்பியில் சிக்குண்டு ஸ்தலத்திலே பலியானார்
சம்பவயிடத்திற்கு சென்ற பொலிஸார் சட்டவிரோதமாக மின்சார வேலியமைத்த தோட்ட உரிமையாளரை கைது செய்ததுடன் சடலத்தை நாவலபிட்டி வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதணைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட நபரை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.