நீங்கள் வழங்க வேண்டிய பிரதியுபகாரத்தை றிஷாட் பதியுதீன் வழங்க முயற்சித்தது ; உங்கள் அகராதியில் குற்றமா.......??


எம்.எஸ்.எம்.ஆஸிப்
முகாமைத்துவ பீடம்


னமத பேதமின்றி பின்னிப்பிணைந்து வாழ்ந்த தமிழ், முஸ்லிம் மக்களை சில விஷமிகள் இனவாதம் என்ற எண்ணக்கருக்குள் உட்படுத்தி சில மணி நேர அவகாசத்திற்குள் கையில் ஒரு பையுடன் எம் மண்ணை விட்டு வெளியேற்றியமை உலகறிந்த வரலாற்றுத்தவரு....!!!

இவ்வடுக்களை சுமந்து எம் சொந்த மண்ணின் ஏக்கத்துடன் இருபத்தி ஏழுவருடம் எம் வாழ்நாளை பலபகுதிகளில் கழிக்கும் போது கூட எங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட இனச்சுத்தீகரிப்புக்கோ? உடமைகள் சூறையாடப்பட்டதிற்கோ?? உரிமைகள் பறிக்கப்பட்டதற்கோ?? உங்களால் எவ்வித பிரதியுபகாரம் வழங்கப்படவுமில்லை, எங்களால் வற்புறுத்தப்படவுமில்லை....

வெளியேற்றப்பட்டு வருடங்களும் கடந்தன எமது குடும்பங்களும் கிளைவிட்டன சொந்த மண்ணைப்பிரிந்து வாழும் சோகங்களுடன்....

#இவ்_வரலாற்றுத்_தவறின் பிரதியுபகாரம் கேள்விக்குறியாக இருக்கும் வேலையில், விரட்டப்பட்ட லட்சம் பேரில் ஒருவனான ரிஷாட் பதியுதீன் நீங்கள் வழங்க வேண்டிய பிரதியுபகாரத்தை இனமத பேதம் மறந்து மீண்டும் எமது உறவுகள் ஒற்றுமையாக வாழவேண்டுமென வழங்க முயற்சிப்பது உங்கள் #அகராதியில்_தவறானதாக சித்தரித்து கொடி பிடிப்பதை எந்த எண்ணக்கருக்குள் கொண்டுவருவது...???

எம் பரம்பரையில் பிறந்து எம்முடன் வாழும் எம் வார்சுகளை புறக்கணித்து 1990 இல் சென்றவர்கள் மட்டும் மீண்டும் வாருங்கள்(பலரை மன்னரையினில் இருந்து தான் அழைத்து வரவேண்டும்) 1990 கு பின்னர் பிறந்தவர்கள் நிற்கதியாக நில்லுங்கள் என்ற வகையிலான உங்களின் கோசங்கள் இனவாதமும் அடக்குமுறை நோக்கமும் பலரின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது என்பதற்கு சான்றுபகிர்கின்றன....

நாம் எப்போதும் சமாதானத்தை விரும்புபவர்கள் ; எங்களை சோதிக்க நினைத்த பல சக்திகள் சிதைந்த வரலாறுகளும் உலகறிந்தது....

முன்னைய வடுக்கல் நீங்கி ஒரே மொழிபேசும் உறவுகளுடன் ஒன்றாக வாழ நினைக்கும் எம்மையும் வாழ வைக்க நினைக்கும் லட்சத்தில் ஒருவனையும் எதிர்த்து கொடி பிடிப்பீர்கள் என்றால் சிலரின் உடல் மட்டும் தான் அழிந்துள்ளதே தவிர எண்ணங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது பலரின் உள்ளங்களில் என்பதே நிதர்சனம்.....???
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -