பிரதமரின் கூற்றுக்கு முஸ்லிம் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தங்களது எதிர்ப்பைக் காட்டவேண்டும்.

லங்கை நாட்டில் சில பேரினவாத குழுக்களுக்கெதிராக நீதியை நிலை நாட்டவேண்டிய தேவை உள்ளது. இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு அப்பால் பேரினத்தை சேர்ந்த சகோதர அரசியல்வாதிகளின்பங்களிப்பும் மிகவும் அத்தியாவசியமானது. பேரின சகோதர அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் கரிசனை கொள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளின் செயற்பாடுகள்மிகவும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

அளுத்கமை கலவரத்தில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக நாட்டின் உயரிய சபையான பாராளுமன்றத்தில் வைத்துபிரதமர் ரணில்விக்கிரமசிங்க கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய்யென தெரிந்தும் இது வரை முஸ்லிம்கட்சிகள்எதுவும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தாமை கவலையளிக்கின்றது.முஸ்லிம் அரசியல் வாதிகள் இப்படிஇருக்கும்நிலையில் பேரின சகோதரர்களின் ஆதரவைஎதிர்பார்க்க முடியாது.

முஸ்லிம் கட்சிகள் எதிர்வரும் தேர்தல்களில் யானையின் வால் பிடித்து திரிய வேண்டிய தேவை இருப்பதால் இவர்கள்ஒரு போதும் பிரதமரை நேருக்கு நேர் சுட்டிக் காட்டி எந்தவிதமானவார்த்தை பிரயோகங்களையும்மேற்கொள்ளமாட்டார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் தனது பலமான எதிர்ப்பைவெளிக்காட்டி வரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மறைக்காரை முஸ்லிம் கட்சிகள் முன் மாதிரியாக கொள்ள வேண்டும்.

பாராளுமன்றத்தில் பேசப்படும் பேச்சுக்களுக்கான தெளிவு பாராளுமன்றத்தில் வைத்து வழங்கப்படுவதே மிகவும் பொருத்தமானதாகும். இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகள் ஒருவரை ஒருவர் வீழ்த்தி முன்னேறுவதில் காட்டும்அக்கறையின் ஒரு சிறுபகுதியேனும் முஸ்லிம் மக்கள் தொடர்பிலான விடயங்களில் காட்டினால் இலங்கைமுஸ்லிம்சமூகம் என்கோ சென்றிருக்கும். இலங்கை முஸ்லிம் சமூகம் தீர்வின்றி தவிர்க்க முஸ்லிம் அரசியல்தலைமைகளே பிரதான காரணம் என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -