கூறுவதற்கு எந்த தேவையும் இல்லை - மட்டு அரசாங்க அதிபர் சார்ள்ஸ்

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்-
டந்த நேர்காணலின் பொழுது தான் மிகவும் இன்னல்களுக்கு உள்ளாகி கடமையாற்றுகின்ற பிரதேசமாக மட்டக்களப்பினை பார்க்கின்றேன் என ஒரு வார்த்தை பிரயோகத்தினை நீங்கள் மன வேதனையுடன் கூறியிருந்தீர்கள். அந்த வகையிலே கடந்த திங்கட் கிழமை (10.07.2017) உங்களுக்கு எதிராக இடம் பெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் அதை தொடர்ந்து அடுத்த நாள் செவ்வாய் கிழமை (11.07.2017) உங்களுக்கு ஆதரவாக இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்டதில் உள்ள மக்களுக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா என்ற கேள்விக்கே கூறுவதற்கு எதுவுமே தேவை அற்ற மாவட்டமாகவே மட்டக்களப்பினை பார்க்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்சிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் விரிவான பதில்களும், அதனுடைய காணொளியும் எமது இணைய வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. 

கேள்வி :- கடந்த அரசாங்கத்திலும் சரி, இந்த அரசாங்கத்திலும் சரி ஒரு இரும்பு பெண்மணியாக தனது கடமையினை செய்து வரக்கூடிய மாவட்ட அரசாங்க அதிபராக இருக்கின்றீர்கள். ஆனால் கடந்த திங்கட்கிழமை (10.07.2017) நீங்கள் ஊழலுக்கு ஒத்துளைப்பதாக உங்களுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று மட்டக்களைப்பில் இடம் பெற்றது. அது சம்பந்தமாக உங்களுடைய கருத்து என்ன.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- கடந்த திங்கட் கிழமை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கூட்டி வரப்பட்டு கிரான் மற்றும் வாகரை பிரதேச செயலாளர்களின் இட மாற்றத்திற்கு தான் காரணம் எனவும் அந்த இட மாற்றத்தினை செய்ததாக கூறியுமே எனக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தினை நடாத்தியிருந்தார்கள். உள்ளூராட்சி அமைச்சினால் மீள் அழைக்கப்பட்ட குறித்த இரண்டு பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் சம்பந்தமாக எனக்கு எதிரான இவ்வாறான ஒரு ஆர்ப்பாட்டம் செய்தமை எதற்கு என்பதே புரியாத விடயமாக இருக்கின்றது.

கேள்வி- பிரதேச செயலாளர் ஒருவர் இடம் மாற்றம் பெறுவதற்கான உண்மையான நடை முறை என்ன.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- பிரதேச செயலாளர் ஒருவர் இட மாற்றப்படுவது அரசாங்கத்தின் கொள்கையின் அடிபடையில் அல்லது அரசாங்கத்திற்கு பிரதேச செயலாளர்கள் சம்பந்தமான முறைப்பாடுகள், வேறு விதமான தகவல்களின் அடிப்படைகளில் அமைச்சின் நடை முறைக்கேற்ப செய்யப்படுவதுதான் பிரதேச செயலாளர்களின் இடமாற்றம் சம்பந்தமான உண்மையான நடை முறையாகும்.

கேள்வி:- அப்படி என்றால் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலாளர்களின் இட மாற்றத்திற்கு மாவடட் அரசாங்க அதிபரான நீங்கள்தான் காரணம் என ஆர்ப்பாட்டத்தில் கூறப்பட்டதே.

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- குற்றம் சுமர்த்துவது என்பது மிகவும் இலகுவான காரியமாகும். ஆதாரத்துடன் சுமர்த்துவதுதான் சரியான நடை முறை என நினைக்கின்றேன். ஆகவே குற்றம் சுமர்த்துகின்றவர்கள் ஆதாரத்துடன் செயற்படுவதுதான் அவர்களுக்கு நல்லது.

கேள்வி:- பத்து வருடங்களுக்கு மேலாக இரண்டு பிரதேச செயலாளர்களும் குறித்த பிரதேச செயலகங்களில் கடமையாற்றி வருவதாக அறியக்கிடைக்கின்றது. அப்படி என்ற குறித்த பிரதேச செயலாளர்களின் இட மாற்றம் ஒரு சாதரண இடமாற்ரமாக கூட இருக்கலாம் அல்லவா.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- தற்பொழுது அரசாங்கத்தினுடைய தீர்மானம் மூன்று வருடங்கள் அல்லது ஐந்து வருடங்களே பிரதேச செயலாளர் ஒருவர் குறித்த பகுதி ஒன்றில் கடமையாற்ற முடியும். அதே போன்று தொடர்ந்து ஒரு பிரதேசத்திலே கடமையாற்றுவதினால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக ஒரு பொதுவான தீர்மானத்திற்கு வந்திருக்கின்றார்கள். இருந்த பொழுதும் இது அமைச்சினுடைய நடை முறையும், கொள்கையும் என்ற படியினால் மேலதீக கருத்துக்களை என்னால் வெளியிட முடியாது.

கேள்வி:- 13 வது திருத்த சட்டத்திலே காணி அதிகாரங்கள் பிரதேச செயலாளருக்கு இருக்கின்றதா.? அல்லது மாவட்ட அரசாங்க அதிபருக்கு இருக்கின்றதா.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- அதிகார பரவலாக்கள் பற்றியும் அதிகார பரவலாக்கள் தரப்பட வேண்டும் என்பது பற்றியும் பேசுகின்றவர்கள் பொறுப்போடு இவ் விடயங்கள் பற்றி பேச வேண்டிய கடமைபாட்டில் இருக்கின்றார்கள். 13 வது திருத்த சட்டத்தின் படி பிரதேச செயலாளருக்குத்தான் காணி அதிகாரம் அதே போன்று மணல் அனுமதி பத்திரங்களை வழங்குகின்ற அதிகாரம், மரங்களை வெட்டுவதற்கான அனுமதி வழங்குதல், மாடுகளை ஏற்றி செல்வதற்காக்ன அனுமதி, மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்குதல் போன்றவைகள் பிரதேச செயலாளருக்கு பாரப்படுத்தபட்டுள்ளது. இதிலே விஷேடமாக காணி விடயங்களை அணைத்தும் பிரதேச செயலாளர் மற்றும் மாகாண சபையிடம் மட்டுமே இருக்கின்றது. மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு எதுவித காணி அதிகாரங்களும் வழங்கப்படவில்லை.

கேள்வி:- காணி சுவீகரிப்பு, அது சம்பந்தமான விடயங்கள் மீதான குற்றச்சாட்டு குறித்த ஆர்ப்பட்டத்தில் உங்கள் மீது சுமர்த்தப்பட்டதோடு அதிகாரிகள் மேற்கொள்கின்ற குறித்த விடயம் சம்பந்தமான ஊழல்களுக்கும் நீங்கள் துணை போவதான குற்றச்சாடினை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- குற்றச்சாட்டுக்களை சுமர்த்துவதனை கடந்த இரண்டு வருடங்களாக நடை முறையாக செய்து வருகின்றார்கள். குற்றச்சாட்டுக்களை சுமர்த்துபவர்கள் ஆவணங்களோடும், உத்தரவாதத்தோடும் சமர்பித்து குற்றச்சாட்டுக்களை சுமர்த்துவதே சிறந்தது.

கேள்வி:- குறுகிய காலத்திற்குள் நீங்கள் பதவி உயர்வு பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தினை விட்டு செல்லப்போவதாக அறியக்கிடைக்கின்ற நிலையில் உங்கள் மீது இவ்வாறான பாரிய குற்றச்சாட்டுகளை சுமர்த்துவதற்கான காரணம் என்ன.? அல்லது அதற்கு ஏதும் அரசியல் பின்னணிகள் ஏதும் இருக்கின்றதா.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- நிச்சயமாக இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருக்கின்றன. அவைகள் இந்த மாவட்டத்தில் அபிவிருத்தி சார்ந்த விடயமோ அல்லது மக்கள் நலன் சார்ந்த விடயமோ அல்ல என்பதும் எனக்கு தெரியும். அவற்றை நான் இங்கு கூறுவதற்கு விரும்பவில்லை. மாவட்டத்தினை விட்டு வெளியே சென்றவுடன் அவற்றை விளாவாரியாகவும், சகல விடயங்களையும் பற்றியும் ஊடகங்களுக்கு அறிவிப்பேன்.

கேள்வி:- அண்மையில் வாகரை பிரதேசத்தில் 1100 ஹெர்க்டெயர் காணி மீன்பிடி அமைச்சினால் தங்களுடைய அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு வழங்கப்பட வேண்டும் என மாவட்ட செயலகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையிலும், அது கை கூடாத நிலையிலும் அரசாங்கம் தத்துணிவாக குறித்த காணியினை சுவீகரித்துள்ளதாக கூறப்படுவது சம்பந்தமாக மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நீங்கள் எதனை கூற விரும்புகின்றீர்கள்.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- இது சம்பந்தமாக எங்களுக்கு எந்த தொடர்புகளும் கிடையாது. அது எங்களிடம் கலந்தாலோசிக்கபடுகின்ற விடயமுமல்ல. காணி சம்பந்தமாக அரசாங்க அதிபருக்கு எந்த அதிகாரமுமில்லை. சென்ற வருடம்தான் இதற்கான வர்த்தமானி பிரசுரத்தினை அனுப்பி பிரதேச செயலாளர்களுக்கும், மாகாண காணி ஆணையாளர்களுகும் மீன் பிடி துறை அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இது மீன் பிடி துறை அமைச்சுக்கு கீழால் வர்த்தமானியில் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் முன்மொழிய வேண்டாம் என எங்களுக்கு அறிவித்துள்ளார்கள் 

கேள்வி:- ஏனைய மாவடங்களை எடுத்துக்கொண்டால் சிங்களம் , தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் சகல மதத்தினையும் பிரதி படுத்துகின்ற அரசாங்க நிருவாக உத்தியோகத்தர்கள் சகல பிரதேசங்களிலும் கடமையாற்றுகின்றார்கள். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே முஸ்லிம் பிரதேசங்களில் முஸ்லிம்களும், தமிழ் பிரதேசங்களில் தமிழர்களும் என கடமையாற்றுவதற்கான காரணத்தினை மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- எனக்கு பல மாவாடங்களில் வேலை செய்துள்ள அனுவம் இருக்கின்றது. அங்கெல்லாம் நிருவாகம் தனியாகவும், அரசியல் முன்னெடுப்புக்கள் தனியாகவும், இன மத செயற்பாடுகள் தனியாகவுமே இடம் பெறுகின்றன. அதற்கு வவுனியா மாவட்டத்தில் தனியான சிங்கள பிரதேசமாக இருக்கின்ற இடத்தில் இடம் பெறுகின்ற அரச நிருவாகம் மிகச் சிறந்த உதாரணமாகும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல விடயங்களும் இன, மத, மொழி, அரசியல் எனும் பார்வைகளுக்குள்ளும், சகல நிருவாக நடை முறைகளும் அரசியல் மயப்படுத்தப்பட்டுமே இருக்கின்றன.

கேள்வி:- உங்களுக்கு எதிராக இடம் பெற்ற ஆர்ப்பட்டத்தின் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் உங்களுடைய ஊழல் குற்றச்சாட்டுக்கள் அணைத்தும் நிருபிக்கப்பட்டு நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தினை விட்டும் அனுப்பப்பட வேண்டு என காரசரமாக உங்களுக்கு எதிரான கருத்தினை தெரிவித்தனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- அரசாங்க அதிபரான நான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நடை வியாபாரம் செய்வதற்கு வந்தவர் அல்ல வியாழேந்திரன் போன்றவர்கள் மாவட்டத்தினை அனுப்புவதற்கும், விரட்டி அடிப்பதற்கும். என்னை மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அனுப்பவதென்பது அமைச்சருடையதும் அமைச்சரவையினுடைய தீர்மாணமுமாகும்.

கேள்வி:- உங்களுடைய வருகைக்கு பிற்பாடு மட்டக்களப்பு மாவட்டம் தயட்டகிருள்ள மற்றும் இன்ன பிற அபிவிருத்திகள் மூலம் ஏனைய மாவடங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது முன்னிலையில் இருக்கின்றது. அந்த நிலையில் உங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தில் அரசாங்க ஊழியர்கள் மேற்கொள்ளும் ஊழல்களுக்கு அரசாங்க அதிபரே காரணம் என குற்றம் சுமர்த்தப்பட்டதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- மவட்ட அபிவிருத்தி என்கின்ற விடயமானது என்னை விடவும் பிரதேச செயலகங்களில் பிரதேச அபிவிருத்தி கூட்டங்களை நடாத்துபவர்களும், தலைமை தாங்குகின்றவர்களும், அனுமதி வழங்குகின்றவர்களும், மீளாய்வு செய்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள், இரண்டு பிரதேச செயலாளர்களும் இட மாற்றம் செய்யப்பட்டவுடன் இவற்றை கூறுவதனை தவிர்த்து அந்தந்த கூட்டங்களிலும், மீளாய்வு கூட்டங்களிலும் கூறியிருக்க வேண்டும். 

அதற்கு மேலதீகமாக 25015ம் ஆண்டு ஜனவரி மாததிலிருந்து 2015ம் டிசம்பர் மாதம் வரைக்கும் எங்களுடைய செயற்பாடுகள் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவினால் ஆய்வு செய்யப்பட்டும், ஆவணப்படுத்தப்பட்டும் தற்பொழுது அதனுடைய முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலே நூற்றுக்கு தொன்னூறு எனும் புள்ளிகளையும், மிகவும் நன்று என்ற நிலையையும் மட்டக்களப்பு மாவட்டம் அடைந்துள்ளது.

கேள்வி:- 11.07.2017 அன்று மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இடம், பெற்ற ஆர்ப்பாட்டமானது அரச நிருவாக உத்தியோகத்தர்களுக்கு அல்லது உங்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமா.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- அரச அதிகாரிகள் என அணைவரையும் சேர்த்துத்தான் குறித்த குற்றசாட்டானது சுமர்த்தப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் தங்களுடைய உளக்கிடக்கினை தெரிவிப்பதற்கான ஒன்று கூடலாகவும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிரான கருத்துக்களாகவுமே நான் அதனை பார்கின்றேன்.

கேள்வி:- கடைசியாக கடந்த நேர்காணலின் பொழுது தான் மிகவும் இன்னல்களுக்கு உள்ளாகி கடமையாற்றுகின்ற பிரதேசமாக மட்டக்களப்பினை பார்க்கின்றேன் என மனவேதனையுடன் ஒரு வார்த்தை பிரயோகத்தினை நீங்கள் மன வேட்னையுடன் கூறியிருந்தீர்கள். அந்த வகையிலே கடந்த திங்கட் கிழமை 10.07.2017 உங்களுக்கு எதிராக இடம் பெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் அதை தொடர்ந்து அடுத்த நாள் செவ்வாய் கிழமை 11.07.2017 உங்களுக்கு ஆதரவாக இடம் பெற்ற ஆர்ப்பாட்டம் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு ஏதாவது கூற விரும்புகின்றீர்களா.?

அரசாங்க அதிபர் சார்ள்ஸ்:- கூறுவதற்கு எதுவுமே தேவை அற்ற மாவட்டமாகவே மட்டக்களப்பினை பார்க்கின்றேன்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -