தன்னை ஏமாற்றியவரின் வீட்டின் முன் நிர்வாணப் போராட்டம் செய்த பெண்ணால் பரபரப்பு.!

பிரேசிலில் பழுதடைந்த காரை ஏமாற்றி விற்றமையால் கோபமடைந்த பெண்ணொருவர் கார் விற்பனையாளர் வீட்டின் முன்பு நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டார்.  பிரேசிலில் சாண்டா கேட்ரீனா பகுதியைச் சேர்ந்த கார் விற்பனையாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கார் ஒன்றை விற்பனை செய்துள்ளார்.குறித்த கார் வாங்கிய 2 நாட்களிலே பழுதடைந்து நின்று நிலையில், கார் திருத்துனரை அழைத்து காரை சோதனை செய்யும்படி கேட்டுள்ளார். 

காரை சோதனை செய்த கார் திருத்துனர், காரின் வெளிப்புறம் மட்டும் புதியதாக உள்ளதாகவும், உள்ளே இருக்கும் இயந்திரங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தும் பழைய பழுதடைந்த பொருட்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெண், கார் விற்பனையாளரிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். அதற்கு குறத்த விற்பனையாளர் காரை விற்பனை செய்தவுடன் தங்கள் பணி முடிவடைந்துவிட்டதாகவும், இனிமேல் தாம் பொறுப்பில்லை என்றும் கூறியுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பெண், கார் விற்பனையாளர் வீட்டின் முன் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டு அவரின் வீட்டின் வேலிகள் மற்றும் கதவுகளை கற்களை வீசி சேதப்படுத்தினார். பெண்ணின் செயலைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பிரதேசத்தின் மக்கள், இதுகுறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்தனர். இதனைத்தொடர்ந்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -