கத்தார் அமீரைச் சந்தித்தார் இலங்கை வெளிவிவகார அமைச்சர்

லங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, கட்டார் அமீர் அஷ் ஷேய்க் தமீம் பின் ஹமத் ஆல் தானியை தலைநகர் தோஹாவில் சந்தித்தார்.

மேற்படி சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் குறித்தும் அவற்றை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

அதேவேளை, பேச்சுவார்த்தைகள் மூலமே தற்போதைய வளைகுடா நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டையும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க எடுத்துக் கூறினார்.

மேற்படி விஜயத்தின் போது கட்டார் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஷெய்க் அப்துல்லாஹ் பின் நாஸர் அல் தானி, வெளியுறவு அமைச்சர் ஷெய்க் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அல்-தானி ஆகியோரையும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க சந்தித்தார்.(ஆ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -