கிராம அலுவலர்களுக்கு கணனிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்




அஸீம் கிலாப்தீன்-
பொ
லன்னறுவை மாவட்ட கிராம அலுவலர்களுக்கு டெப் கணனிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களது தலைமையில் நேற்று முற்பகல் பொலன்னறுவையில் இடம்பெற்றது.

தொலைதொடர்புகள், டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சின் வழிகாட்டலில் ”திறன் சமூக வட்டம்” செயற்திட்டத்தின் கீழ் இந்த டெப் கணனிகள் வழங்கப்படுகின்றன. அதனை குறிக்குமுகமாக தமன்கடுவ, திம்புலாகல மற்றும் ஹிங்கிராக்கொட பிரதேச செயலக பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் கிராம அலுவலர்கள் மற்றும் கிராம பிரதிநிதிகள் சிலருக்கு ஜனாதிபதி அவர்களால் டெப் கணனிகள் வழங்கப்பட்டன.

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன,பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, தகவல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவி திருமதி சித்ராங்கனி முபாரக் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -