சர்வதேசத்தின் பின்னணியிலேயே அனைத்தும் இடம்பெறுகிறது !

லங்கையில் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்கமைவான செயல்களை அதிகம் காணக்கிடைப்பதை முன்னிட்டு இலங்கைமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென என பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். இப்பாகமுஹ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார். 

தற்போது இலங்கை அரசியலமைப்பை மாற்றும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.தேர்தல் முறைமை, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் போன்றவற்றை இல்லாதொழிக்கப் போகிறோம் என்றவர்கள் இன்றுஅதிகாரப்பரவலாக்கம் அப்படி இப்படி என்று கதைத்து கொண்டிருக்கின்றனர். 

இலங்கையின் பெரு மதிப்புக்குரிய அஸ்கிரிய பீடங்கள் கூட இவர்கள் கொண்டு வர சிந்திக்கும் அரசியலமைப்பை பார்த்துநாட்டுக்கு ஆபத்தாக முடிந்துவிடுமோ என அஞ்சி இலங்கை அரசியலமைப்பை மாற்ற தேவையில்லை என கோரிக்கைவிடுத்துள்ளனர். அஸ்கிரிய பீடங்கள் பல முக்கிய தகவல்களை பெற்றே இக் கோரிக்கையை விடுத்திருக்கும். இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும் போது சர்வதேச நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவானவை என்பதில் சிறிதும்சந்தேகமில்லை.

அதே போன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் ஸ்ரீலங்கா தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முடக்க நிலையில்உள்ளதாக ஊடகவியலாளர்களை சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் போர்க்குற்றம் இளைத்த படையினரை நீதியின் முன் நிறுத்துவதில் சிறிதளவாவது முன்னேற்றம் காணப்படுகிறதா என்றால் அதில் சிறியளவிலான சான்றுகளைகூட காண முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இவர் கூறிய சமகாலத்தில் இலங்கையின் பாதுகாப்பு படையை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர். குறித்தகைதுக்கும் மேற்குறித்த ஐ.நா சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனின் கூற்றுக்கும் இடையில் முடிச்சு போட்டுபார்க்கின்ற போது, இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் கைதுகளானது சர்வதேச நிர்ப்பந்தத்தின் பெயரில் இடம்பெறுகிறதா என்ற அச்சம் எழுகிறது. இலங்கையில் நிலவிய கொடிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவியபாதுக்காப்பு படைவீரர்கள் நியாயமற்ற முறையில் கைது செய்யப்படுவதை ஒரு போதும் ஏற்க முடியாது.

இன்று ஒரு சில ஊடகங்கள் குறித்த கைது செய்யப்பட்ட நபர்கள் கப்பம் பெற்றதால் கைது செய்யப்பட்டார்கள் போன்றதோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. தங்களது உயிரை பணயம் வைத்து போராடியவர்கள் சர்வதேசநிர்ப்பந்தத்தில் மிகக் கேவலான சான்றிதழை இவ்வரசு வழங்கிக்கொண்டிருக்கின்றமை மிகவும் கவலையானவிடயமாகும். இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. இது தொடர்பில் இலங்கை மக்கள் மிகவும்விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -