முகவர்கள் மூலம் நாம் முஸ்லிம்களுடன் தொடர்பை பேணியதால் தான் முஸ்லிம்கள் எம்மை பற்றி சரியான தெளிவை பெறவில்லை


நாம் இந்த நாட்டு முஸ்லிம்களுடன் முகவர்கள் மூலம் தொடர்பை பேணியதால் தான் முஸ்லிம்கள் எம்மை பற்றி சரியான தெளிவை பெறவில்லை என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

திருகோணமலை நகரில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் திங்கள் மாலை நடைறெவுள்ள கூட்டுஎதிர்க்கட்சியின் மாபெரும் கூட்டத்திற்கு முன்னேற்பாடாக முன்னாள் கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளர்ஜவாதுல்லா அவர்களின் ஏற்பாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் பல சந்திப்புக்கள்கூட்டங்கள் நடைபெற்றது.

இதன் ஒரு அங்கமாக திருகோணமலை மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையுடனான தலைவர் கலாநிதி நஸார்மௌலவி அவர்களின் தலைமையில் கிண்ணியாவில் இடம்பெற்றது இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து கூறிய அவர் ..

எம்மிடம் இருந்து ஆட்சியை பறிக்க மேற்குலம் செய்த சதியில் இந்த நாட்டு முஸ்லிகள் மாட்டிக்கொண்டனர்.அதைஇப்போது அவர்கள் உணருகின்றனர்.எம்மை சந்திக்கும் முஸ்லிம்கள் மூலம் நான் இதனை நான்அறிந்துகொள்கிறேன்.

அன்று மூதூரில்,கிண்ணியாவில் காத்தாங்குடியில், முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கில் விடுதலை புலிகளால்கொலைசெய்யப்பட்டனர்.முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொன்று குவிக்கப்பட்டபோது நாம் அதைதடுத்து நிறுத்தினோம்.எமது அர்பணிப்பு காரணமாக வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் சுதந்திர காற்றைசுவாசிக்கின்றனர்.

அது தவிர எமது காலத்தில் வடக்கு கிழக்கில் வரலாற்று அபிவிருத்தியை நாம் மேற்கொண்டோம்.வடக்கு கிழக்கில்உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மக்களுக்காக கேட்ட அனைத்து அபிவிருத்திகளையும் நாம்செய்துகொடுத்தோம்.மக்களுக்கு அபிவிருத்திகள் தொழில் வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருக்கவில்லை.ஆனால் இன்றுஎன்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்துகொண்டுள்ளார்கள்.

தற்போது முஸ்லிம்கள் எம்மை சந்திக்கிறார்கள்.எமக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளிக்கிறார்கள்.முன்பு விட்டதவறை நாம் இனிமேல் விடமாட்டோம்.முஸ்லிம் மக்களுடன் நேரடியாக தொடர்பை பேணி அவர்கள் எமக்குள்ளநல்லுறவை மேலும் வளர்த்துக்கொள்வோம் என குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -