நோட்டன் பிரிட்ஜ்மு.இராமச்சந்திரன் -
மத்திய மாகாண விவசாய அமைச்சின் ஊடாக நடாத்தப்பட்டு வருகின்ற "தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் NVQ பயிற்சி நெறியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 05.07.2017 நடைபெற்றது
மத்திய மாகாண விவசாய தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் தலைமையில் பேராதனை மாகாண விவசாய திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது
இந் நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் , மாகாண விவசாய பணிப்பாளர், மாத்தளை மாவட்ட மேலதிக விவசாய பணிப்பாளர், திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் ,பயிற்சி நெறியை நிறைவு செய்தோர் என பலர் கலந்து கொண்டனர்