இலங்கை தேயிலை தொழில்துறையின் 150 ஆண்டு விழா

நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன்- 

லங்கை தேயிலையின் 150 வது ஆண்டு விழா நோர்வூட் தேயிலை தொழிற்சாலையில் 06.07.2017 மாலை இடம்பெற்றது

தேயிலை அதிகார சபை தோட்ட அதிகாரிகள் சங்கம் ஆகிய இணைந்து நடாத்திய. இந் நிகழ்வானது.

பொகவந்தலா பெருந்தோட்ட கம்பனியின் பொகவந்தலா பிராந்திய பொருப்பதிகாரி டொரோன் மஜித் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிராந்திய பொருப்பதிகாரி மஜித் உரையாற்றுகையில் ஜோம்ஸ்டெயிலரினால் 1867 ம் ஆண்டு கலாஹா லூல்கந்துர பகுதியில் முதன் முதலாக தேயிலை பயிர்செய்கை அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

இப்போது 150 வருட வரலாற்றை எட்டி நிற்கின்றது தேயிலை தொழில்துறையானது சுமார் 125 வருடகாலம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இறுதி 25 வருட காலப்பைகுதி பல்வேறு சவால்களுக்கு மத்தியிலே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பங்களிப்புடன் இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்டு வந்த தேயிலை தொழில்துறையனது
தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் என தான் நம்புவதாகவும் தொடர்ந்தும் தொழிலாளர்களின் பங்களிப்பை வழங்கி இன்னும் 150 வருடம் இலங்கை தேயிலை சாரதனைகளை படைக்க வேண்டும் என்றார்.

நிகழ்வில் பொகவந்தலா பெருந்தோட்ட அதிகாரிகள். தொழிலாளர்கள் என பலர் கலந்துகொண்டதுடன் தேனீர் விருந்து வழங்கப்பட்டு தொழிலாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -