வாழைச்சேனையில் மருத்துக்களஞ்சியமும்,மருத்துவ ஆய்வு கூடமும் 13ம் திகதி திறக்கப்படும்

நிப்ராஸ்-
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் , கிழக்குமாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலமாக (2016) கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் நசீர் அஹமட் (பொறியியலாளர்) அவர்களின் கரங்களினால் அடிக்கல் வைக்கப்பட்டு 21 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மருந்துக்களஞ்சியம், மருத்துவ ஆய்வுகூடம் ஆகியன எதிர்வரும் 13.07.2017 (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு முதலமைச்சரினால் திறந்துவைக்கப்படவிருக்கின்றன.

இந்த திறப்புவிழா நிகழ்வில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் கௌரவ ALM.நசீர் , கிழக்குமாகாண விவசாய அமைச்சர் கௌரவ கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம், கிழக்குமாகாணசபையின் பிரதி தவிசாளர் கௌரவ இந்திரகுமார் நித்தியானந்தன், கிழக்குமாகாணசபை உறுப்பினர்களான கௌரவ அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் , கௌரவ ராசையா துரைரட்ணம் , கௌரவ கோவிந்தன் கருணாகரம், கௌரவ மார்க்கண்டு நடராஜா, கௌரவ ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை , சுகாதார அமைச்சின் செயலாளர் K.கருணாகரன் மற்றும் கிழக்குமாகாண சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் K.முருகானந்தன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் திருமதி LM.நவரட்னராஜா ஆகியோரும் பிரதேச பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -