புத்தளம் பாலாவி கரம்பை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் குறித்த சந்தேகநபர்கள் தங்கி இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரையும் விசாரணை செய்த போது அவர்களிடமிருந்த வெவ்வேறு வகையான 7 கையடக்கதொலைபேசிகள், 15 சிம் கார்ட்கள் என்பவற்றை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
நாட்டில் பல பிரதேசங்களிலும் பொது மக்களுடன் தொலைபேசி மற்றும் குறுந்தகவலூடாக தொடர்பு கொண்டு பல்வேறு பணப்பரிசுகள் கிடைத்திருப்பதாக கூறி அந்த பரிசினைப் பெற்றுக் கொள்ள ஈஸி கேஷ் மூலம் குறித்த அளவு பணத்தினை அனுப்பி வைக்குமாறும் கேட்டுள்ளனர்.
இவ்வாறு அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் யாவும் கைப்பற்றப்பட்ட கையடக்க தொலைபேசி மற்றும் சிம் காட்களில் இருந்துள்ளதை பொலிசாரின் விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரால் கைப்பற்றப்பட்ட கையடக்கதொலைபேசிகள் மற்றும் சிம் காட்கள் மரணித்தவர்களினதும் திருடப்பட்டதும் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
களனி, கிரிபத்கொட, ஏறாவூர், மட்டக்களப்பு, நுவரெலியா, ஹட்டன் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தோருக்கு தகவல்களை அனுப்பி, இவ்வாறு பொது மக்களிடமிருந்து பணத்தை (தினகரன்)