மனிதாபிமானம் இன்னும் நிலைத்திருக்கிறது என நிரூபித்துக் காட்டிய முகநூல் நண்பர்கள்..!

ண்மையில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் களுத்துறை மாவட்டமும் பிரதானமானது. அதிகளவான மழைவீழ்ச்சி, வெள்ளம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட லயங்களில் வாழும் மக்களுக்காக கை கோர்த்திருக்கிறார்கள் பேஸ்புக் நண்பர்கள்.

வறுமைக்கோட்டின் கீழ் உள்ள தோட்ட தொழில் செய்யும் மக்களை அதிகம் கொண்ட புலத்சிங்ஹல பகுதி மக்கள் அனர்த்த இடர்பாடுகளில் சிக்கி தமது இயல்பு வாழ்க்கையை இழந்திருப்பதாகவும், சரியான உதவிகள் தங்களை வந்தடையவில்லை எனவும் தெரிவித்ததோடு பேஸ்புக் பயனர்களுக்கு நன்றி கூறி உலர் உணவுப் பொருட்களை பெற்றுக் கொண்டதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

ரிமாஸ் அகமட், அமேஷ்வரன், ப்ரகாஷ், மாதவன், பிரதீப், ஸபர் அஹமட், இம்ராத், ஜமீல், பார்த்தீபன், அப்துல்லாஹ் போன்றோரால் முன்னெடுக்கப்பட்ட இந்த திட்டத்தில் பேஸ்புக் நண்பர்கள் பலரின் உதவியுடன் சுமார் 400 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இது தொடர்பில் பேஸ்புக் நண்பர்கள்:-

முதலில் நண்பர்களுக்கும், உதவிக்கரம் நீட்டியவர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். இதைக் குறிப்பிட்டு சொல்லக்காரணம் எந்த பேனரும் இல்லாத நண்பர்களை நம்பி உதவிப் பொருட்களை கையளித்த அந்த நம்பிக்கைக்கு பெரிய சல்யூட்.

மீடியாக்கள் மற்றும் பல தனியார் அமைப்புகள் தங்கள் உதவிகளை பிரம்மாண்டமான அளவில் வழங்கிக்கொண்டிருக்க அப்படியான பேனர் ஒன்று இல்லாத காரணத்தால் தண்ணீர் போத்தல், பனடோல் மாத்திரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாய் இருந்தது. பின்னர் எதிர்பார்ப்பை விஞ்சிய சேகரிப்பால் அது உலர் உணவுப் பொருட்களாக மாறி 400 குடும்பங்களை சென்றடைந்தது.

தேயிலை, ரப்பர் தொழிற்சாலைகளை கொண்ட கஷ்ட பிரதேசம் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்ஹலவை சுற்றியிருக்கும் லயங்கள். அங்கே வரும்போது இந்த இடத்தில் நிற்பதே ஆபத்து என்பதாக உணர்ந்த எமக்கு அந்த மக்கள் அங்கு வாழ்வதே ஆச்சர்யம் அளித்தது. இருட்டினால் மை இருட்டு, மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு. பொதிகள் என்று பார்த்தால் நம் வசதிக்கு சொச்சம் தான். ஆனால், அதை வாங்குவதில் அந்த மக்கள் காட்டிய மகிழ்ச்சியும், நன்றியும் அங்கு வெள்ளம் வந்தால் மட்டுமல்ல, நமக்கு மனது வந்தாலே உதவி செய்யலாம் என்பதை உணர்த்தியது.

இதில் நோன்போடு ஈடுபட்ட இஸ்லாமிய நண்பர்கள் ஸபார் அஹமட், இம்ராத், ஜமீல் ஏ மஜீத், ரிமாஸ் அஹமட் அவர்களோடு வாகன சாரதி கணேஷ் ஆகிய அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறோம் என தெரிவித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -