ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் உடல் நிலை சரியில்லாமல் சுகயீனமுற்று இருந்த தேரரின் உடல் நிலை தேரவில்லை என பொதுபல சேனா வட்டார செய்திகள் தெரிவித்துள்ளன.
ஞானசார தேரர் சுகயீனமுற்று உள்ளதாக பொதுபல சேனா கூறிவரும் நிலையில் சிங்கள ஊடகம் ஒன்று அவரது உடல் நிலை தொடர்பில் அவ்வமைப்பிடம் இன்று வினவியுள்ள போது அவர் நீண்டகாலமாக சிறுநீர் பிரச்சினையால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும் அவருக்கு ஏற்கனவே கொரியாவிலும் இலங்கையில் சத்திரசிகிற்சை மேற்கொண்டிருந்தாகவும் அவ்வமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் பதில் அளித்துள்ளார்.
கடந்த இரு தவணைகள் நீதிமன்றத்துக்கு ஞானசார தேரர் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.