கிழக்கு ஆளுனரின் அலுவலகத்திற்கு முன்னாலுள்ள கடலில் இறங்கி மக்கள் போராட்டம்..!

அப்துல்சலாம் யாசீம்-
டத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னாலுள்ள கடலில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி இன்று (15) தங்களுக்கு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்னால் தங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் விடயத்தில் கவனம் செலுத்துமாறும் நியாயமான தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி 100வது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையெனவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலை வவுனியா மாவட்டங்களைச்சேர்ந்த 150ற்கும் மேற்பட்டவர்கள் இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -