ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை மூதூர் பெருவெளிபிரதேசத்தில் முறையே 7வயது இரு சிறுமிகளும் 8வயது ஒரு சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 5 சந்தேக நபர்களையும் இன்று மூதூர் நீதிமன்றத்தில் மூதூர் நீதிவான் நிதிமன்ற நிதிபதி ஜ.என்.ரிஸ்வான் முன்னிலையில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தினர். எனினும் பாதிக்கப்பட்ட அச்சிறுமிகள் அவர்களை காட்டவில்லை என மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குழப்ப நிலமைகளை தவிர்க்கும் பொருட்டும் விசாரணைக்கு தடங்கல் ஏற்படாதிருக்கவும் குற்றம் சுமத்தபட்வர்களின் பாதுகாப்பின் பொருட்டும் பொலிஸார் அவர்களுக்கு பிணை வழங்க மறுப்புதெறிவித்தனர் அதன் அடிப்டையில் மூதூர் நீதிவான் நிதிமன்ற நீதிபதி ஜ.என்.றிஸ்வான் அவர்கள் 5 நபர்களையும் 12திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.