சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி: முதல் பரிசு அமெரிக்கருக்கு! 'டொப் டென்'னுக்குள் இலங்கையர்

க்கிய அமீரகம் துபாயில் நடைபெறும் 21ஆம் சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டியுடன் இணைந்து நடத்தப்பட்ட அழகிய குரல் வளத்துடன் இனிமையாக தவறில்லாமல் ஓதும் போட்டியில் பங்கேற்ற 90 பேரில் “டொப் டென்” ஆகத் தெரிவு செய்யப்பட பத்து பேரும் திருக்குர்ஆனை மிக அழகாக ஓதியதை அமைப்புக் குழுவினர் மிகவும் நுட்பமாக அவதானித்தனர். தங்களது இனிய குரல் வளத்தால் அவர்கள் மிகச் சிறப்பாக புனித திருக்குர்ஆனை ஓதி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தனர்.

ஆனாலும், பலத்த போட்டிகளுக்கு இடையில், அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் ஹுஸைஃபா சித்தீகி தனது இனிய இசை போன்ற குரலுடன் , தெளிவான உச்சரிப்புடன் திருக்குர்ஆனை ஓதி இந்தப் போட்டியில் முதலிடத்தை பிடித்தார்.

மேலும், அல்ஜீரியாவைச் சேர்ந்த யூசுப் ஹமாம் இரண்டாம் இடத்தையும், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சலா-எடின் ஹரரௌயி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இலங்கையைச் சேர்ந்த முஹம்மது அர்கம், வங்காள தேசத்தைச் சேர்ந்த முஹம்மது தாரிகுல் இஸ்லாம், இந்தோனேசியாவைச் சேர்ந்த ரஹ்மத் அப்துர் ரஹீம், சவுதி அரேபியாவைச் சேர்ந்த அஹ்மது அப்துல் அஜீஸ், டென்மார்க்கைச் சேர்ந்த அப்துல்லாஹி ஹுசைன், துருக்கியைச் சேர்ந்த இரன் பில்கிர், சாட் நாட்டைச் சேர்ந்த தாவூத் ஹஜர் ஆகியோர் முதல் பத்துப் பேருக்குள் தெரிவானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -