அவுஸ்ரேலிய உள்நாட்டு சேவை விமானம் ஒன்றில் குண்டு பதுக்கி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட தகவல் பொய்யானதென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் குண்டு இருப்பதாக இன்று (செவ்வாய்க்கிழமை) தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவுஸ்ரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் பகுதியில் உள்ள Albury விமானநிலையம் மற்றும் அங்கிருந்த உள்நாட்டு சேவை விமானம் என்பன சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
எனினும், அங்கு குண்டு பதுக்கி வைக்கப்படவில்லை என்பது தீவிர சோதனை நடவடிக்கையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி விமானத்தில் 42 பயணிகள் இருந்ததாகவும் அவர்கள் உடனடியாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஆ)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -