காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள்..!

[Political Gossip]
வாகன துஷ்பிரயோக குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து யாரெல்லாம் வாகன துஷ்பிரயோங்களில் ஈடுபட்டார்கள் என்ற தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

அவற்றுள் அண்மையில் ஒரு தகவல் வெளியானது. களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அவர். அமைச்சரும்கூட. அந்த மாவட்டத்தில் அவருக்கு சொந்தமாக இருக்கும் 15 ஏக்கர் தோட்டத்தில் அவர் நிர்மாணப் பணிகளைத் தொடங்கியுள்ளார்.

அதற்கான துப்புரவு பனி மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த போது அந்த இடத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐந்து வாகனங்கள் காணப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக அவை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் அவற்றில் காணப்பட்டிருக்கின்றன. அவை புழுதி படிந்தும் அவற்றின்மேல் இலை, குழைகள் நிரம்பியும் காணப்பட்டனவாம். துப்புரவுப் பணியில் ஈடுபட்ட ஒருவர் அந்த வாகனங்களை அவரது கைத் தொலைபேசியின் மூலம் படம் எடுத்து அதே மாவட்டத்தைச் சேர்ந்த மஹிந்த தரப்பு எம்பியான பியால் நிஸாந்தவிடம் அனுப்பியுள்ளார்.

இந்தப் போட்டோக்களை வைத்துக் கொண்டு இப்போது அவர் களத்தில் இறங்கியுள்ளார். அவை அரச வாகனங்களா? அவை ஏன் அங்கு நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன போன்ற தகவல்களை பியால் திரட்டத் தொடங்கியுள்ளாராம். மிக விரைவில் மற்றுமொரு கூற்றை எம்மால் காணக்கூடியதாக இருக்கும்போல.
எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -