ஞானசாரவை கைது செய்யாமல் தடுக்கும் பிரபலம் யார் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுவார்களா

ஞானசார தேரரை கைது செய்யவிடாமல் அழுத்தம் கொடுக்கும் அந்த பிரபலம் யார் என்பதை முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம் சமூகத்திற்க்கு தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பானதுறை பிரதேச சபை தலைவர் இபாஸ் நபுஹான் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியினரே ஞானசார தேரரின் பின்னால் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருந்து அவர்களை இயக்குவதாக குற்றம்சாட்டி அன்று அஸாத் சாலி போன்ற இடைத்தரகர்கள் முஸ்லிம் வாக்குகளை கொள்ளையடித்து மைத்திரியை ஆட்சிபீடம் ஏற்றினார்கள்.

ஆட்சிப்பீடம் ஏறிய பின்னர் ஆறுகடக்கும் வரை அண்ணன் தம்பி பிறகு நீ யாரோ நான் யாரோ என்பதை போல் இந்த நல்லாட்சி முஸ்லிம்களை புறக்கணிக்க ஆரம்பித்தது.

இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இதுவரை இடம்பெற்றுள்ள சம்வங்களையும் அதனை எண்ணிக்கையையும் பார்க்கும்போது இனவாதிகளே இந்த ஆட்சியை ஆட்டுவிக்கிறார்கள் என்ற சந்தேகம் மேலும் வலுப்பெறுகிறது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஞானசாரதேரர் ஆட்டம் போட்டும் அவரை இந்த நாட்டு சட்டத்தாலும் நீதித்துறையாலும் அடக்கமுடியவில்லை.

பொதுபல சேனாவை இயக்கியது இந்த அரசாங்கத்தில் உள்ள ஒரு பிரபலம் என்பதும் அந்த பிரபலத்தின் அலுத்தம் காரணமாகவே ஞானசார தேரரை அன்றும் இன்றும் கைதுசெய்ய முடியாமல் உள்ளதாக மகிந்தவை இனவாதியாக காட்டியவர்களே இன்று முனுமுனுக்கத் துவங்கியுள்ளனர்.

ஞானசார தேரரின் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதும் அவரை இயக்கியவர்கள் யார் மக்கள் மன்றத்தில் இன்று தெளிவாகியுள்ளது.

அன்றைய ஆட்சியிலும் இன்றைய ஆட்சியிலும் இனவாதம் உள்ளதென்றால் இவ்விரு ஆட்சிக் காலங்களிலும் இதனை ஆட்டுவிக்கும் சக்தி பலம் பொருந்தியதாக இருக்க வேண்டும்.இந் கோணத்தில் இதனை நோக்கினால் அது யார் என்பதை மிக இலகுவாக அறிந்து கொள்ளலாம்.

எனவே,எதிர்காலத்தில் எம்மீது திணிக்கப்படவுள்ள புதிய தேர்தல் முறை அதிகாரப்பகிர்வு தனியார் சட்டம்தொடர்பாகவும் நாம் மிகுந்த கவனத்துடன் செயற்படவேண்டும் இல்லாவிட்டால் மஹிந்தவை இனவாதியாக காட்டிஉண்மையான இனவாதிகளை ஆட்சிக்கு கொண்டுவந்த அஸாத் சாலி போன்றவர்கள் எம்மை நடு வீதிக்குகொண்டுவந்துவிடுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -