சிறுவர்கள் பிச்சை எடுத்தால் இனி கைது செய்யப்படுவர் - அரசு



சிறுவர்கள் பிச்சைக்கும் நிலைமை அதிகரித்து வரும் நிமையை கருத்தில்கொண்டு, இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் முகமாக, கைதுசெய்யும் நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு தலைமையகம் மூலம் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை சிறுவர் பிச்சை எடுக்கும் தொழிலுக்கு அமர்த்தும் நபர்களையும் சிறுவர்களையும் கைதுசெய்ய 14 செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. இதில் 11 ஆண் சிறுவர்களும் 07 பெண் சிறுவர்களும் பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதில் 4 பேர் சிறுவர் நன்னடத்தை இலத்திலும் 14 பேர் பெற்றோர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர். இதேவேளை, சிறுவர்கள் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு தலைமையகம் எதிர்காலத்தில் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவ​டிக்கை எடுத்து வருகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -