இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பில் வெளிநாடுகளிடம் முறைப்பாடு

லங்கையில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து 9 நாட்டு தூதுவர்களிடம் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு தெவட்டஹவா பள்ளிவாசலில் இன்று மாலை அசாத் சாலியினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வொன்றுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா, கனடா ஆகிய 9 நாட்டு பிரதிநிதிகளிடமே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலந்துரையாடல்கள் மற்றும் வீடியோ காணொளிகள் மூலம் முஸ்லிம்கள் இலங்கையில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு எடுத்துச்சொல்லப்பட்டதுடன் இது வரைகாலமும் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான முறைப்பாட்டு அறிக்கையும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் தாம் இது குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் முஸ்லிம் பிரதிநிதிகள், முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -