அமைச்சர் நஸீரும், அபிவிருத்தி காணும் அட்டாளைச்சேனை வைத்தியசாலையும்

போராளி அட்டாளைச்சேனை -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின், கிழக்கு மகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீரின் பாரிய முயற்சியினால் பல மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு கடந்த வருடம் அடிக்கல் நடப்பட்டு இன்று அதன் வேலைகள் மிக வேகமாக நடைமுறைப்படுத்திக்கொண்டிப்பதை நேரில் சென்று நீங்கள் பார்வையிடலாம் குறிப்பாக அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு தேவைகளில் மிகப்பிரதானம் இவ்வைத்தியசாலை அதன் சேவைகளை விஸ்தரிக்கும் செயற்பாட்டில் மாகாண சுகாதார அமைச்சர் மேற்கொண்டு வருகின்றதை குறித்த வைத்தியசாலைக்கு சென்று பார்வையிடலாம். 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரினால் கடந்த வருடம் (2016, செப்டம்பர்) இவ்வைத்தியசாலைக்கான அடிக்கல் நடப்பட்டு இன்று வைத்தியசாலை மிக வேகமாக பூர்த்தியாகும் நிலைக்கு வந்துள்ளதுடன், இக்கட்டிடம் இரண்டு மாடிகளின் வேலைகளை மேற்கொண்டு வருவதுடன் அதன் மூலம் நமது பிரதேசத்திற்கான சேவை மிகவும் சரியானளவு பூர்த்திசெய்யும் நிலை உள்ளது அதற்காக நிதி ஒதுக்கிய எமது அமைச்சர்களுக்கு இவ்வேலை நன்றிகளை தெரிவிப்பதுடன், இவ்வைத்தியசாலைக்கு மிக அவசரத்தேவையகளாக இருந்த வைத்தியர் பிரச்சினைகள் இன்று நிறைவுக்கு வந்ததுடன், இன்னும் வைத்தியர்களை கொண்டுவரும் முயற்சியில் அமைச்சர் உள்ளார். 

அதுபோல், அவசர சிகிச்சை பிரிவு இவ்வைத்தியசாலைக்கு இல்லாத நிலையினை அறிந்த அமைச்சர் உடனடியாக தற்போது உள்ள கட்டிடத்தில் அவசர சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டிருப்பதை இன்று நீங்கள் அறிந்துகொள்ளலாம் அதற்காக உழைத்த அமைச்சருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டிய தேவையுள்ளது குறிப்பாக இந்த அவசர சிகிச்சை பிரிவு இதுவரை காலமும் நமது பிரதேசத்தில் இல்லாத நிலை காணப்பட்டதால் பல அசெளகரியங்களை இம்மக்கள் அனுபவித்து வந்தால் அதை தீர்த்து வைத்த அமைச்சருக்கு நாம் பாராட்ட வேண்டும். 

இது போல் குறித்த வைத்தியசாலையின் வடிவமைப்பை மாற்றுவதற்கு பிரதேச வாசிகளின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலைக்கு முன்னாள் உள்ள வழிப்பாதையை வேறு நபர்களிடம் உள்ள தனிநபர் இடங்களை கொளவனவு செய்தே வழியை சீர்செய்ய வேண்டிய தேவையுள்ளதால் அதற்கான சில நிதி ஏற்பாடுகளை அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரு சில உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் பெற்றுவந்தாலும் இன்னும் சில நிதிப்பற்றாக்குறைகளுக்கு நமது வைத்தியசாலை என்ற நோக்கோடு இவ்வைத்தியசாயின் முன் வழி தோற்றத்திற்க்காக உதவுதன் மூலம் எமது வைத்தியசாலையை அபிவிருத்து செய்வதில் நாம் செய்யும் ஓர் பங்களிப்பாக இருக்கும் எனவும் நம்புகின்றோம். 

மேலும், மிக விரைவில் அடுத்த அபிவிருத்தியை நோக்கிய பாதையில் அமைச்சர் தயாராகிய மிகவிரைவில் மக்கள் காணக்கூடும் என்பதில் இவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை, ஆகவே இவ்வாறு நமது பிரதேச மக்களிம் அபிருத்திக்காக அமைச்சராக இருந்த செயற்பட்டு வரும் மாகாண சுகாதார அமைச்சருக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன் அவரை ஊக்கப்படுத்தி இன்னும் பல சேவைகளை பெற்றுக்கொள்ளோம். அத்துடன் இவரின் மூவின மக்களுக்கான சேவைகளும் பாராட்டத்தக்கது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -