ஹஸ்பர் ஏ ஹலீம்-
மூதூர்- பெரியவெளியில் பாடசாலை சிறுமிகள் மூவர் துஸ்பிரயோகத்திற்கு உட்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இன்று 2ம் திகதி வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளிலும் மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
திருகோணமலை இ.கி.ச.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பிரதி அதிபரால் தேசிய செய்தித்தாளின் நிருபர் ஒருவர் இவ்வாறு புகைப்படம் எடுக்க மறுப்பு தெரிவிக்கபட்டடமை குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்கு இடம் பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க முன்னெடுத்த இப் போராட்டத்தை வெளி உலகத்திற்கு தெரியப்படத்த முன்னெடுக்கபட்ட ஊடக செயற்பாட்டிற்கும் ஊடக சுகந்திரத்திற்கும் தடை ஏற்படுத்தும் இச் செயலை திருகோணமலையில் ஏனைய ஊடகவியலாளர்கள் கண்டிக்கின்றனர்.