குடிநீர் தயாரிப்பு நிறுவனமொன்றைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர்கள், யாழ்.நல்லூர் சுற்றாடலில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களால் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் சுமார் 30 பேருக்கும் அதிகமானவர்களிடம் இவர்கள் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட சந்தேகநபர்கள், மேலதிக விசாரணைக்காக யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு தொடக்கம் மேற்படி தண்ணீர் தயாரிப்பு நிறுவனம் இவ்வாறு விநியோகஸ்தர் உரிமம் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றி, சுமார் 3 தொடக்கம் நான்கு கோடி வரையான பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(ஆ)