தன்னுடைய கருத்துகளால், அஸ்கிரிய பீடத்தைச் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் வருந்தியிருப்பின், அதற்காகத் தான் அவர்களிடம் மன்னிப்புக் கோருவதாக, அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க கூறினார்.
அத்துடன், தன்னுடைய கருத்துகளால், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரும் வருந்தியிருப்பின், அவரிடமும் தான் மன்னிப்புக் கோருவதாக, கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அமைச்சர் கூறினார்.
கண்டி அஸ்கிரிய பீடத்தின் சங்க சபையினால், அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பில், கண்டியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டின் போது, தற்போதைய அரசாங்கத்தில் பதவியிலிருக்கும் அமைச்சர்கள் சிலர் பற்றி, மகாநாயக்க தேரர்கள் அதிருப்தி வெளியிட்டிருந்தனர். இந்நிலையிலேயே, நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது, அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க மன்னிப்புக் கோரினார்.
