ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
திருகோணமலை மூதூர் மல்லிகைத்தீவில் கடந்த 28ம் திகதி மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாழைச்சேனை பொது அமைப்புக்களினால் கண்டன பேரணி வியாழக்கிழமை (01.06.2017) வாழைச்சேனையில் இடம்பெற்றது.
இந்தப் பேரணி வாழைச்சேனை மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகி 10.30 மணியளவில வாழைச்சேனை பொலிஸ் நிலையம் வரை பிரதான வீதி வழியாக பேரணி சென்றடைந்தது.
பேரணிக்கு ஆதரவாக வாழைச்சேனை ஆலயத்தின் ஆலய நிருவாகங்கள், சிவில் அமைப்புக்கள், பெற்றோர்கள், பெண்கள் சமூக அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.