மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது தாக்குதல்: பொதுபல சேனாவின் இருவர் கைது..!

டந்த மே மாதம் 21ஆம் திகதி குருநாகல், மல்லவபிட்டிய ஜும்ஆப் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாட்டாளர்களா இருப்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அவர்கள் தற்பொழுது குறித்த பிரதேசத்திலிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் 19எதிர்வரும் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -