ஏனைய மதங்களையும் கலாச்சாரங்களையும் வெறுக்கும் ஒருவர் இலங்கையராக இருக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் விஷேட அறிவிப்பொன்றை நிகழ்த்தி பிரதமர் இதனை குறிப்பிட்டார்.“நான் இலங்கையனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன், நான் ஏனைய மதங்களையும் கலாச்சாரங்களையும் மதிக்கிறேன்” என பிரதமர் இதன்போது ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார்.
இதேவேளை, இனங்களுக்கெதிராக வன்முறைகளை தூண்டிவிடுபவர்களுக்கு எதிராக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அமைச்சரவை அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இன நல்லிணக்கத்தை பாதிக்கும் செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவைப்படின் புதிய சட்டங்களையும் உருவாக்குவோம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
