ஞானசாரவைக் கைது செய்வதற்கு பொலிசார் முயற்சி செய்கின்ற நிலையில் முதலில் இந்நாட்டில் இனவாதம் அடிப்படைவாதத்தை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறில்லாமல் ஞானசாரவைக் கைது செய்தால் சிங்கள இளைஞர்கள் வீதியிலிறங்கிப் போராடுவார்கள் என இனவாதி டான் பிரசாத் இன்று சூளுரைத்துள்ளார்.
தனி மனிதனாக இருந்த டான், அமித், சாலிய போன்ற இளைஞர்களைத் தற்போது நல்லாட்சி அரசின் நிர்வாகம் ஞானசாரவின் கீழ் ஒன்றிணைத்துள்ள நிலையில் ஞானசாரவைக் கைது செய்ய படையணிகளைக் களமிறக்கியுள்ளதாக தெரிவிக்கின்றது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கின்ற பொலிசார் இன்று அமித் வீரசிங்கவை விசாரித்துள்ள நிலையிலேயே டான் பிரசாத் இவ்வாறு சூளுரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.