மண்மீட்பு போராட்டம்?

திகமான முஸ்லீம்களையும் வெளிப்பார்வைக்கு படித்த மற்றும் முற்போக்காளர்களையும் கொண்டதாக இருந்தாலும் திட்டமிட்டு அநாதையாக்கப்பட்ட சமூகநிலையே உள்ளக உண்மையாக உள்ளது.
கிண்ணியாவின் சமூகவிழுமியங்களையும் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் வழிநடாத்தும் பொறுப்பும் கடமையும் இந்த மண்ணின் மக்களிடம் இருந்து பறிபோனது பழைக கதை.

கிண்ணியாவின் வியாபாரம்,மீன்பிடி,சுயதொழில்,சிறுஊக்குவிப்புத் தொழில்கள் ,அரசியல்வாதிகளின் கையாட்கள் மற்றும் கொந்தராத்து என்பன ஏற்கனவே பிறபிரபிரதேசங்களைச் சாரந்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஸஹாத் கொடுப்பவர் குறைந்து ஸஹாத்துக்காக காத்திருப்பவர்கள் அதிகரித்துள்ளது.

வருடக்கணக்கில் புடவைக்கடை நடாத்தி ஊருக்கு தேவையான பங்களிப்பை நமது வியாபாரிகள் செய்து வருகின்றனர்.இவர்களுக்கு உண்மையில் இரு பெருநாட்களே வருடத்தில் உழைக்கும் சந்தர்ப்பம்.இதையும் சிலநாட்கள் வெளியூராருக்கு தெருஓர கடைபோட அனுமதி வழங்கி நமது மக்களின் வயிற்றில் நாமே அடிக்கிறோம்.வெளியூர் வியாபாரிகள் ஊரின் முழுப்பணத்தையும் வளங்களையும் சுருட்டிச் செல்வதற்கு பங்காளிகளாக உள்ளோம்

இத்துடன் நின்றுவிடாமல் ???????

அண்மைக்காலமாகஅரசியல் ரீதியாக நாட்டின்சகல கட்சிக்காரனுக்கும் கதிரைபோட்டு வரவேற்பும் வாக்கும் கேட்கிறோம்.நாளை ஞானதாரவுக்கும் வரவேற்க கூட்டம் உருவாகும்.எங்கள் வாக்குகளிள் குளிர்காய வெளியூர் அரசியல் தலமைகளுக்கு மாமா தொழில்பார்க்கிறோம்.மொத்தத்தில் நமது ஊரை அரசியல் விபச்சார மடமாக மாபியாக்களுக்கு தாரைவார்த்து கொடுத்துள்ளோம்.

நமது பலமும்,நமது ஒற்றுமை நமக்கே புரியாமல் அடிமைகளாக உள்ளோம்.
இந்த பின்னனியில் தான் தற்போது நமது பிரதேசத்தின் மண்வளத்தை இறுதியாக கொள்ளையடித்து ஊரின் வீதிகளால் எடுத்துச் செல்வதை கைகட்டி படம்பிடிக்கிறோம்.இதவிட கேவலமான வெட்கப்பட வேண்டிய ஒன்று எவருக்கும் வந்துவிடக்கூடாது.பக்கத்து வீட்டுக் காணிக்கு ஒருஅங்குலம் மரம்சாய்ந்தால் ஊரைக் கூட்டி சட்டம் பேசுகிறோம்.
ஆனால் நமது பரம்பரை மண்ணை அந்நியவன் திருடும் போது உணர்வு சொத்துப்போவது ஏன்?

நமது ஊரின் பௌதீக அமைப்பு சீரழிக்கப்படுகிறது.நமது ஊரின் மீதான இயற்கை அழிவுகளுக்கு அடித்தளம் இடப்படுகிறது.இதில் மிகவும் கொடுமையான விடயம் நாம் இன்னும் வேடிக்கை பார்ப்பதுதான்.

நமது மானிட உணர்வு அடிமையாக்கப்பட்டுள்ளது.தனிமனித சுயநலங்கள் மேலோங்கியுள்ளது.ஊரின் மீதான பிடிப்பும் விசுவாசமும் மரத்துப்போய்விட்டது. நமது ஊரில் உயிரோட்டமாகவும் ரோசமுடையதாகவும் எஞ்சியிருப்பது
நமதுமண்ணும் பௌதீக அமைப்புகளுமே. சகவலவற்றையும் சீரழித்துவிட்டு இறுதியாக மண்ணையும் விட்டுவைக்கவில்லை.
நாம் கிண்ணியாக்காரன் என்று மார்புதட்டிப்பேசுவதற்கு நாளை இடமே இல்லாத சமூகமாக மாறவேண்டுமா?

அடுத்து இந்த மண்கொள்ளையை தடுப்பதில் பிரதேச செயலாளர் மற்றும் அதிகாரிகள் இரட்டைவேஷம் போடுகின்றனர்.உண்மையில் மத்திய மற்றும் மாகாணசபைகளுக்கிடையில் ஒத்தியங்கும் பட்டியலாக காணிவிவகாரம் 1987ம் ஆண்டு 13வது சட்டதிருத்தம் மூலம் வழங்கப்பட்டது.இதன்படி Land development Act-19 of 1935 அரசகாணிகளை மக்களுக்கு வழங்குதல் மற்றும் வேறுநோக்கங்களுக்காக பயன்படுத்துதல் தொடர்பில் GAவிற்கு அதிகாரம் வழங்கியது.இது Divisional Secretaries Act -No.58 of 1992 ன் பிரகாரம் பிரதேச செயலாளருக்கு மாற்றப்பட்டு பூரணஅதிகராம் வழங்கப்பட்டது.

ஆனால் நமது பிரதேச செயலாளர் மேல்மட்ட சக்திகளின் கெடுபிடியால் தனது அதிகாரத்தை உபயோகிக்க முடியாது தடுமாறுகிறார்.
அதேநேரம் நமது அரசியல்வாதிகள் வெறுமனே பேசுவதற்கும் அறிக்கைவிடுவதுமாக உள்ளனர்.வர்களின் தயவில் கொந்தரித்துச் செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூர்காரர்களின் நிகழ்ச்சித் திட்டம் இதனுடன் தொடர்புபட்டுள்ளது.ஆகவே பேச்சளவில் மட்டும் படம்காட்டுகின்ற நிலை தொடர்கிறது.

ஆகவே இந்தப் பிரச்சனையை இளைஞர்கள் கையில் எடுக்க வேண்டும்.சட்டமும் தைரியமும் நமது பக்கம் இருக்கின்றபோது நாம் வீதியில் இறங்க வேண்டும்.ஆனால் இந்த அரசியல்வாதிகளை கடந்த டெங்கு போராட்டத்தில் போல போலிக்காக வருவதற்கு இடமளிக்கக் கூடாது.

உண்மையில் ஊரையும் மண்ணையும் நேசிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த உணர்வு தோன்றவேண்டும்.நாம் கடந்தகாலங்களில் கல்விக்காக,சுகாதாரத்துக்காக,கடலுக்காக,இஸ்லாத்திற்காக போராடினோம்.ஆனால் முதல்முறையாகவும் முடிவாகவும் நமது மண்ணை மீட்கப் போராடுவோம்.
அதிகாரத்தை பிரயோகிக்க முடியாதசெயலளர்,கோழைகளாக உளறள அரசியல் தலமைகளுக்கு சிறந்த பாடத்தை கற்பிப்போம்.
அந்தவகையில் எதிர்வரும் பெருநாள் முடிந்ததும் இதற்கு முடிவான முற்றுப்புள்ளி அகிம்ஷை அல்லது சட்டத்திற்கு உற்பட்ட வரையில் வன்முறை மூலம் எடுக்கப்படவேண்டும்.அதற்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வோம்.

நமது மண்ணுக்கு
நாமே சொந்தக்காரர்கள்!
நமது மண்ணை
நாமே காப்போம்!
நாளைய சந்ததிக்காவது
நாமே மீட்போம்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -