ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
ஒன்றிணைந்த தபாற் தொழிற் சங்கங்களின் முன்னணி திங்கட்கிழமை 26.06.2017 நள்ளிரவு முதற்கொண்டு ஆரம்பித்த நாடு தழுவிய தொடர்ச்சியான வேலை நிறுத்தம் இரண்டாவது நாளான புதன்கிழமையும் தொடர்ந்தது.
பல கோரிக்கைகளை முன்வைத்து, தபால் திணைக்கள ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டத்தின் காரணமாக, அஞ்சல் மற்றும் அதனுடன் தொடர்புடைய அத்தனை சேவைகளும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
நாடாளாவிய ரீதியில் உள்ள பிரதான அஞ்சல் அலுவலகங்களின் வாயிற்கதவு பூட்டப்பட்ட நிலையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிமூலம் வேலை நிறுத்தப் போராட்டம் பற்றி எழுதிய அட்டைகள் தொங்குகின்ற அதேவேளை பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துகின்றோம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


